/ கட்டுரைகள் / ஆகஸ்டு-15 (புதினம்)

₹ 450

பக்கம்: 490+12 மகாத்மா காந்தியிடம், நான்காண்டு காலம் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்த வி.கல்யாணம் என்பவரின் அனுபவங்களை, தன் வரலாறு போல இல்லாமல், சற்று வித்தியாசமான பாணியில், புதிய உத்தியில், ஒரு புதினம் போல எழுதியிருக்கிறார் நூலாசிரியர். பாராட்டுக்குரிய முயற்சி. வலைப்பூவில் சத்யா.காம் மற்றும் கல்யாணம்.காம் ஆகிய இரண்டும் கருத்துக்களை (நாட்டு நடப்புக்களை) பரிமாறிக் கொள்ளும் வகையில், நூலை வழிநடத்திச் செல்கிறார் ஆசிரியர். இன்றைய தினம் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கும்,90 வயது நிரம்பிய கல்யாணம்தான் இந்தப் புதினத்தின் கதாநாயகர். சத்யா என்ற 12 வயது நிரம்பிய ஒரு சிறுமி மற்றொரு கதாபாத்திரம். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவும், இன்றைய நவீன இந்திய ஜனநாயக ஆட்சியும் புதினத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது.மகாத்மா காந்தியுடன், கல்யாணம் இருந்த நாட்கள் தொடர்பான பல ஆவணங்கள், புதினத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த "புதின முயற்சி கவனிக்கப்பட வேண்டிய கவனத்திற்குரிய புதிய, துணிச்சலான இலக்கிய முயற்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை