/ கதைகள் / அவள் மட்டும் இருந்தால் போதும்!
அவள் மட்டும் இருந்தால் போதும்!
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் எல்லாவற்றையும் மனைவியுடன் எதிர்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையை விதைக்கிறது. ‘நிஜம் ஆகாத நிழல்கள்’ என்னும் கதையில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற உண்மை உணர்த்தப்பட்டுள்ளது. கிராமங்களின் அவல நிலையை கண் முன் காட்டுகிறது ஒரு கதை. பொழுதுபோக்குக்கு மட்டும் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது. வாழ்வில் சந்திக்கும் துன்பங்களை விளக்குவதாக சில கதைகள் அமைந்துள்ளன. ஈர்க்கும் கதைகளின் தொகுப்பு நுால்.– முகிலை ராசபாண்டியன்