/ மருத்துவம் / அவள் நலம்

₹ 125

பெண்களின் உடல் பிரச்னைகளுக்கு ஆலோசனை தரும் வகையில் அமைந்துள்ள நுால். கருவில் துவங்கி வளரிளம் பருவம், கர்ப்ப காலம், குடும்ப கட்டுப்பாடு சார்ந்த விபரங்களை எளிய நடையில் விவரிக்கிறது. பெண்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய தக்க வழிகளை கூறுகிறது. குழந்தையின் பாலினம், பெண்களை பாதிக்கும் மார்பக, கருப்பை தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தகவல்களை தருகிறது. கருவுற்ற பெண்கள் சந்திக்கும் உடல் நல பிரச்னை களையும், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கூறும் நுால். கர்ப்ப தடை தொடர்பான சட்ட விளக்கமும் தரப்பட்டுள்ளது. மொத்தம், 22 தலைப்புகளில் பெண்களின் உடல் நல பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன. நலம் காக்கும் நுால். – ஒளி


முக்கிய வீடியோ