/ கட்டுரைகள் / ஆவணச் சுவடுகள் தொகுதி – 4
ஆவணச் சுவடுகள் தொகுதி – 4
கல்வெட்டு, மெய்க்கீர்த்தி, பழங்கால நாணயம், நடுகல் போன்றவற்றை கண்டறிந்து ஆராயும், ஆய்வாளர்களின் செய்தி அடிப்படையிலான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இதழ் நுால். இந்த இதழில், 17 கட்டுரைகள், படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.தேசத்தின் பெருமை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு சின்னங்களை வெளிப்படுத்தும் வகையில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. பழங்கால குகை ஓவியங்கள், பாண்டியர் கால கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள் மற்றும் மன்னர் ராஜராஜ சோழன் சமாதி பற்றி எல்லாம் கட்டுரைகள் உள்ளன.இந்த இதழ், ‘தினமலர்’ நாளிதழ் கவுரவ ஆசிரியராக பதவி வகித்தவரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான அமரர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.