/ ஆன்மிகம் / அழகன் முருகன்

₹ 90

பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்... பார் போற்றும் தயாளன்... பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன் முருகனைப்பற்றி ஆயிரம் பேர் பாடினாலும் தீராது. சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் திருவிளையாடலை, அழகு தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர் லட்சுமி ராஜரத்தினம். பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தருக்கு கழுத்தணி வழங்கி, அவரின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய முருகன், பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனுக்கு தண்டனை வழங்கி, அவரின் கர்வத்தை அழித்தொழித்தான். வித்வத் தாம்பூலம் பெறுவதற்கு தகுதி உடையவன் அழகன் முருகனே என்கிற கதை, அவனின் பெருமையை பக்தர்களுக்கு உணர்த்தும். முருகனைப் பற்றி எத்தனை பேர் எழுதினாலும், படிக்க படிக்க அவன் மேல் கொண்ட பக்தி பெருகிக் கொண்டே போகும்.– எம்.எம்.ஜெ.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை