வாசகர்கள் கருத்துகள் (1)
My order No 9517 Book not received so far
பக்தியில் ஒரு வகை பிடிவாதம். ஆழ்வார்கள் இப்படித்தான் பெருமாளை பிடித்துக் கொண்டனர். அதிலும் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாள், அந்த இறைவனை திருமணம் செய்து தீருவது என பிடிவாதம் பிடித்து, அதில் வெற்றியும் பெற்றாள். ஆழ்வார்களின் பக்தி வரலாறு அருமையாக எழுதப்பட்டுள்ளது. முதல் மூன்று ஆழ்வார்கள், ஒரு அறையில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் தங்கி இருந்தபோது, திடீரென நெரிசல் அதிகரிக்க, எம்பெருமானே அவர்களுக்கு நடுவில் அமர்ந்து திருவிளையாடல் செய்த அந்த காட்சியை பக்தி அழகுற தந்துள்ளது, அருமையிலும் அருமை. ஒரு ஆழ்வார் எத்தனை பேருக்கு சமமானவர் என்ற புதிய தகவல் இந்த புத்தகத்தில் உள்ளது. தருமி என்ற புலவரால் சிவனின் பாடல் சர்ச்சைக்குள்ளானது. அது போல், நம்மாழ்வார் எழுதிய பாட்டின் பொருள் தெரியாமல் திகைத்து நின்ற சங்கப் புலவர்கள் பற்றிய சுவையான தகவல் இந்த நுாலில் இடம் பெற்றுள்ளது. பெருமாளிடமே கொள்ளை அடித்த ஆழ்வார், கொள்ளையடித்த பொருட்களை துாக்கிச் செல்ல முடியாமல் தவித்த காட்சியை ரசனையுடன் விளக்கி உள்ளார் நுாலாசிரியர். இப்படி பல வித்தியாசமான செய்திகளை உள்ளடக்கிய இந்த புத்தகம், அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. – தி.செல்லப்பா
My order No 9517 Book not received so far