/ ஆன்மிகம் / ஆழ்வார்களும் அற்புதங்களும்

₹ 210

பன்னிரு ஆழ்வார்களின் வரலாறும், திவ்ய தேச விபரங்களையும் தரும் நுால். அரங்கனின் அர்ச்சகரான சாரங்கன் தோளில் ஏறி, சன்னிதியை அடைந்து பகவான் திருவடிகளில் ஐக்கியமான பாணாழ்வார் பற்றி விவரிக்கிறது. பெரியாழ்வார் மகளான ஆண்டாளை, அரங்கனுக்கு மணமுடித்து உறவு கொண்டாடிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. பதினாறு வயது வரை உண்ணாமல், பேசாமல், ஜடமாக பக்தி எரிமலை போல இருந்த நம்மாழ்வார் பற்றி எடுத்துரைக்கிறது. ஆழ்வார்கள் திருமாலை பாடி பக்தி செலுத்தி பரமனிடம் சேர, மதுரகவியாழ்வாரோ குருவாகிய நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாசுரங்களை பாடிய செய்தி விளக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திவ்ய சரிதத்தை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை