/ மாணவருக்காக / பேசிக் எஜூகேஷன் பார் எ சக்சஸ்புல் லைப் (ஆங்கிலம்)
பேசிக் எஜூகேஷன் பார் எ சக்சஸ்புல் லைப் (ஆங்கிலம்)
வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அறிவை எடுத்துரைக்கும் நுால். கற்கும் மற்றும் கற்பித்தல் திறன் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.பழந்தமிழ் நுால்களான ஆசாரக்கோவை, விவேக சிந்தாமணி, நாலடியார், திருமந்திரம், நான்மணிக்கடிகையில் இருந்து மேற்கோள் காட்டி கல்வி மகத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழ்மொழி மேல் உள்ள பற்றை வெளிப்படுத்துகிறது.கல்வியின் அவசியம் விளக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை, அமைதி போன்ற குணங்களின் சிறப்பு விவரிக்கப்பட்டு, அவை வெற்றி அடைய அடிப்படைத் திறன்களை வழங்குவதாக குறிப்பிடுகிறது. கல்வியால் நல்ல சமூகம் அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துரைக்கிறது. பயனுள்ள நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்