/ வாழ்க்கை வரலாறு / பியிங் ஆர்டினரி & டூயிங் எக்ஸ்ட்ரா ஆர்டினரி திங்ஸ் (ஆங்கிலம்)

₹ 400

தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றி சாதனை புரிந்தவரின் சுயசரிதை நுால். தகவல் தொழில் நுட்ப துறையில் அன்றாட சவால்கள், சோதனைகளை தாண்டி சாதனை புரியும் சிறப்பை சொல்கிறது. உலகின் புகழ் மிக்க ஐ.டி., கம்பெனிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்போர் பற்றிய குறிப்புகளை தருகிறது. இது போன்றோரை யாரும் போற்றுவதில்லை என வருந்துகிறது. வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட துயரங்களை, போராட்டங்களால் வென்று விடாமுயற்சியுடன் ஐ.டி., துறையில் கால் பதித்த கதை அனுபவ பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. அறிவு வங்கி, இணைய வங்கி, நல்லெண்ண வங்கி குறித்தும் தகவல்கள் தரும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை