/ வாழ்க்கை வரலாறு / பகவான் ரமணரின் சுவையான வரலாறு
பகவான் ரமணரின் சுவையான வரலாறு
பகவான் ரமணர் வாழ்க்கை வரலாற்று நுால். ரமணருக்கு குருவோ, வழிகாட்டியோ யாருமில்லை; சிறு வயதிலே மரண பயத்தை உணர்ந்து பயணித்ததை எடுத்துரைக்கிறது. உடல், மனம் கடந்து ஆன்மா என்ற வேறுபட்ட ஞானத்தை பெற்றதை குறிப் பிடுகிறது. பொருளாசை துறந்து திருவண்ணாமலையில் ஆன்மிகத்தில் உயர்ந்ததை குறிப்பிடுகிறது. உயிரினங்கள் மீதான கருணையால் குரங்கு, மயில் போன்ற விலங்கு, பறவை, செடி, கொடிகளுடன் பழகிய அனுபவத்தை விவரிக்கிறது. பகவான் ரமணர் ஆத்ம ஞானம் பெற்ற வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்