பாரதிதாசனும் கிளாடு மெக்கேயும்
26, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88.போன்: 2253 3667 ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க நூலகத்தில் 2004ம் ஆண்டு மெலஸ் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில், ஆங்கிலத்தில் வாசித்தளிக்கப்பட்ட கருத்தரங்க கட்டுரையின் விரிவாக்கத்தை இரண்டு தொகுதிகளில் தமிழில் தந்துள்ளார் நூலாசிரியர்.தமிழில் ஒப்பிலக்கியம் அதிகம் மலராத நிலையில், இந்நூல் தமிழுக்கு புது வரவாய் வந்திருக்கிறது. ஒப்பிலக்கிய கோட்பாடுகளை வாசகர்கள் புரிந்து கொள்கின்ற வகையில் இருப்பது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்றாகும்.தமிழ் மறுமலர்ச்சியும், கலையாகும் கருத்து பரல், மனிதனே அளவுகோல், பாவேந்தரின் அழகின் சிரிப்பு, பண்பாட்டு திறனாய்வு, கவிதை உத்திகள் என எட்டு இயல்களில், இரண்டு கவிஞர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டு பதிவு செய்துள்ள அத்தனை செய்திகளும் மிக மிக அருமை. அனைவரும் வாங்கி மறு வாசிப்பிற்கும் உட்படுத்தப்படும் ஒப்பீட்டு இலக்கியம் இந்நூல்.