/ வாழ்க்கை வரலாறு / புத்த சரிதம்
புத்த சரிதம்
பு த்த மதத்தின் கொள்கை சாராம்சத்தை யும், அதை தோற்றுவித்த புத்தரின் வாழ்வையும் அறிமுகம் செய்யும் நுால். உ.வே.சா., எழுதியதை எளிமையாக்கி தரப்பட்டுள்ளது. புத்தர் வாழ்க்கை, போதனைகள், புத்தர் நிறுவிய சங்கம் பற்றிய செய்திகள் தெளிவாக தரப்பட்டுள்ளன. தற்போது புத்தர் தொடர்பாக கூறப்படுவதற்கு மாறாக தகவல்கள் அமைந்துள்ளன. இந்த கருத்துகளுக்கு ஆதாரங்கள், பல்வேறு பவுத்த நுால்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. புத்தரின் துறவறம், தியானம் பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஹிந்து மதத்தில் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறது. பவுத்தம் பற்றிய கருத்துகளுடன் இல்லறத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு புத்தர் கூறிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய நுால். – மதி