/ கட்டுரைகள் / மகாகவி பாரதி சில ஒப்பீட்டுப் பார்வைகள்:
மகாகவி பாரதி சில ஒப்பீட்டுப் பார்வைகள்:
புவனேசுவரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி., நகர், சென்னை-35. (பக்கம்: 206). மலைகளில் இமயமும், நதிகளில் கங்கையும், கவிகளில் பாரதியும் என்றும் போற்றத்தக்கவை. மகாகவி பாரதியாரை மகத்தான 12 தலைவர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள இந்நூல், ஒப்பில்லாத தகவல் களஞ்சியம்."பாரதிக்கு பூத உடம்பளித்தது சின்னச்சாமி ஐயர், புகழுடம்பை அளித்தது சுப்பிரமணிய சிவா' என்று வெ.சாமிநாதசர்மா சொன்னது, அவர் பாரதி கவிதைகளைப் பிரசாரம் செய்து எங்கும் உலவச் செய்ததால் என்பதை இந்நூல் அழகுற எடுத்துக்காட்டுகிறது. பாராட்டும் பற்பல தலைப்புகள் இருந்தாலும், "பாரதியும் பாவேந்தரும்' தலைப்பு இல்லாதது பெரும் குறையே.