/ ஆன்மிகம் / வாராஹி
வாராஹி
வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்று எத்தனை வடிவங்கள். நான்கு கரம், எட்டு கரம், பதினாறு கரம் என்று பலப்பல கோலங்கள். இருந்தாலென்ன?தேவியின் திருவடிகள் இரண்டுதான், நாம் பற்றிக் கொள்ள. உங்கள் எதிர்பார்ப்புகள் கைகூடவும், எதிர்ப்புகள் விலகியோடவும் ஒரு கைவிளக்காக வழிகாட்டுகிறது இந்நூல்.