/ ஆன்மிகம் / திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆலயங்கள்- ஓர் சுற்றுலா கையேடு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆலயங்கள்- ஓர் சுற்றுலா கையேடு
நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 224) அறுபத்திஒன்று தலைப்புகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் சிலவற்றை சிறு குறிப்பு வடிவிலே செய்திகளை படத்துடன் பதிவு செய்துள்ளார். மாவட்டத்தின் கிழக்கிலிருந்து மேற்கு வரை எடுத்து அடுத்தடுத்து தகவல் சேகரித்திருந்தால் பல திருக்கோவில்கள் விடுபட்டிருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும். பாடல் பெற்ற தலங்கள் சில விடுபட்டுள்ளன. இருந்தாலும் பல திருக்கோவில்களின் அரிய செய்தியை முழுமையாகத் தந்துள்ளார். திருச்சி மாவட்டத் திருத்தலங்களை தரிசிக்கச் செல்கின்ற ஆன்மிக அன்பர்களுக்கு இந்நூல் ஒரு கையேடாகப் பயன்படும்.