தேரி மணல் (நாவல்)
கோவன் பதிப்பகம், 17/2, கரியப்பா தெரு, புரசைவாக்கம், சென்னை-7. (பக்கம்: 248.) நாவல் பொழுதுபோக்கு சாதனம் என்பதிலிருந்து மாறி, சமூகப் பிரச்னைகளை மையப் பொருளாகப் பேசும் நிலைக்கு மாறிவிட்டது. சமூக வாழ்க்கைப் பின்னணியாகக் காட்டும் யதார்த்தப் போக்கில் அமைந்த நாவல் முகிலை இராசபாண்டியனின் தேரிமணல்.மண்டைக்காட்டுக் கோயில் (1982) விழாவை ஒட்டி ஏற்பட்ட கலவரம் எப்படி உருவாகி, பரவி, சாதி, மத, ஊர்க்கலவரங்களாக விசுவரூபம் எடுத்தது என்பதை இந்நாவலில் அருமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ளது ஊர்களுக்கிடையேயான கலவரம் பகையாக மாறுகிறது. அதன் விளைவு ஒரே மதம் சார்ந்த காதலர்களை மணம் செய்து கொண்ட பின் விக்டர் ஊரான தாமரைக்குளத்தில் வாழ ஊர்க்காரர்கள் எதிர்க்கின்றனர். நாவலில் காதலைச் சொன்னாலும், சமூக உறவாக மலரும் நிலை அழுத்தமாக காட்டப்படுகிறது. மனித நேயத்தை, மனிதர்களுக்கிடையில் சகோதர உணர்வை ஏற்படுத்திக் கொடுக்காதபோது சமயங்கள், விழாக்கள், சமய மரபுகள் அனைத்துமே வீண் தான் என்ற உணர்வை இந்நாவல் படிப்பவர் மனதில் ஏற்படுத்தும்.நூலின் அச்சமைப்பும், கட்டமைப்பும் வெகு அருமை.