/ ஆன்மிகம் / ஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் - பூஜையும்
ஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் - பூஜையும்
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96.)"ப்ர' என்றால் மிக அதிகம் என்று பொருள். "தோஷம்' என்றால் தீமை என்று பொருள். மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலக்கட்டத்தை தினம் பிரதோஷம் என்று அழைப்பது ஐதீகம். இந்த நேரங்களில் சிவனை வழிபட்டால் துன்பங்களோ, தீமைகளோ நம்மை அண்டாது என்பது நம்பிக்கை. இந்த பிரதோஷ கால விவரங்களை, ஆன்மிக எழுத்தாளரான நாகர்கோவில் கிருஷ்ணன், இந்தப் புத்தகத்தில் சில பரிகார சுலோகங்களுடன் விளக்கிச் சொல்லியிருக்கிறார். இதில் உள்ள பிரதோஷம் தொடர்பான புராணக் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.