சங்கீத மணம் கமழும் கதம்ப மாலை
என்.கிருஷ்ணன், 4 சி, "நேமப்ரியர்' 8, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, சென்னை-600 024. (பக்கம்:140).அந்தக் காலத்தில் நாடக இசைக் கலைஞராய்ப் புகழ் பெற்று விளங்கிய எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகங்களுக்குத் தவறாமல் ஆஜர் ஆகி அவரது இசையை ரசித்திருக்கின்றனர், மகா வித்வான்களாக விளங்கிய அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், கோவிந்தசாமிப் பிள்ளை, நயினாப்பிள்ளை, ராஜரத்னம் பிள்ளை, முத்தையா பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் போன்றவர்கள். மேடைகளில் பாடும் பாடல்களைப் போலவே அந்தரங்கத்தில் அநேக நாட்டுப் பாடல்களை தனது கள்ளத் தொண்டையில் பாடி ஆத்மார்த்தமான சில ரசிகர்களைக் குஷிப்படுத்துவாராம் அரியக்குடி. இப்படி நூல், முழுவதும் படிக்கப் பரவசமூட்டும் துணுக்கு விஷயங்கள். ஆசிரியர் பழம்பெரும் ஏடான சுதேசமித்திரன் வாரப்பதிப்பு ஆசிரியராகவும் பணியாற்றியவர். ஆனால், இந்த நூல் வெளிவந்த சில நாட்களில் நீலம் காலமாகிவிட்டார். அவரது சங்கீத ரசனையை இப்புத்தகம் எதிர்காலத்திலும் வெளிப்படுத்தும்.