/ ஆன்மிகம் / THIRUVILAIYADAL PURANAM MIRACLES OF SIVA

ஆசிரியர்கள்: என்.ராகவன், லட்சுமி வெங்கட்ராமன். (ஆங்கில நூல்)கலாசேத்ரா பப்ளிகேஷன்ஸ், 84, கலாசேத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 166. விலை: குறிப்பிடவில்லை). பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் சேனாதிபதி பதவியைத் துறந்து, சிவனாருக்கும் அவர் தம் அடியார்களுக்கும் தொண்டாற்றுவதையே பிறவிப்பயன் எனக் கருதிய பரஞ்ஜோதி அடிகளார், அகஸ்திய மாமுனிவர் அருளிச் செய்து அவர் மூ லம் கேட்டறிந்த, சிவபெருமான் நிகழ்த்திய 64 (அறுபத்து நான்கு) லீலைகளைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது இந்நூல்.மதுரையம்பதி சோமசுந்தரனார் அன்னை மீனாட்சியின் மகத்துவங்களை எல்லாம் சின்னஞ்சிறு கதைகளாக, பள்ளிக் குழந்தைகள் படித்துப் பயனுறும் வண்ணம், எளிய ஆங்கில நடையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஓவியர் சுபாவின் கைவண்ணத்தில் கதைகள் யாவும் உயிரூட்டம் பெறுகின்றன.


முக்கிய வீடியோ