/ பொது / அவர் ஒரு ஆலமரம்
அவர் ஒரு ஆலமரம்
ஸ்ரீ பதிப்பகம், எல்.289, 12வது தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 370.)தேசியத் தலைவர்களின் அருங்குணங்களின் ஈடுபாட்டுடன் வாழும் நாராயண் ராவ் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்ந்த நாள் முதல், மனித குலத்திற்குச் செய்யும் சேவையை சிறப்பாக கருதுபவர். இவர் நடத்தும் பள்ளியில் கல்வி அறிவும், ஒழுக்கமும் கலந்து ஊட்டப்படுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களைச் சேர்ந்த தலைவர்களோடும் ராவ் ஓர் இனிய உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாக இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தைப் பார்த்த பின்பு தான் இவர் சமூகத்தில் பெரிய மனிதர்களுடன் சமமாகப் பழகியிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நூல் இவரது சிறப்புக்களை காட்டும் படைப்பு.