/ கவிதைகள் / ஐஸ் கட்டி அழகி

₹ 80

குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்:80)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள்.இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.


வாசகர்கள் கருத்துகள் (1)

SATHYA
ஆக 13, 2026 10:05 PM

நான் படித்தில் பிடித்த மிகச்சிறந்த கவிதை புத்தகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை