/ கட்டுரைகள் / மண் பயனுற வேண்டும்

₹ 70

சிப்பி புக்ஸ், 24/28 கிருஷ்ணா தெரு, சென்னை-17. (பக்கம்: 176).வாழ்வை வளம்பெறச் செய்யும் 70 கட்டுரைகள் இந்த நூலில் அணிவகுத்து வரிசையாக நிற்கின்றன. "நதிகளை இணைத்தால் நாசம் ஏற்படுத்தும்' என்ற முதல் கட்டுரையே, யதார்த்தத்தின் முத்திரையாய் உள்ளது. வியட்நாம் நாட்டில் சிக்குன்-குனியா, டெங்கு காய்ச்சலை உருவாக்கும், "ஏடஸ் ஏஜிப்டை' கொசுவை "மீசோ சைக்ளோப்ஸ்' பூச்சிகளை வைத்து அழித்த செய்தி நல்ல தகவல்.முதியோர் இல்லம், அனாதை இல்லம், காதல் திருமணம், திருமண ஆடம்பரம், ஆண்-பெண் சமநிலை, குடி, புகை தீமைகள் ஆகியன இந்தக் கட்டுரைச் சிந்தனைகளில் திறனாய்வு செய்யப்படுகின்றன.பயனுள்ள வாழ்வுக்குப் பயன்படும் நயமுள்ள நூலிது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை