/ கதைகள் / அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள்
அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள்
பாவை பப்ளிகேஷன்ஸ், 142 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 122)."சொல்றதைத் திருப்பிச் சொல்ல மட்டும் தான் கிளிப்பிள்ளைக்குத் தெரியும்' என நினைப்பவர்கள் நாம். மாறாக, இந்நூலின் நாயகியான அபரஞ்சி எனும் பஞ்சவர்ணக் கிளி சாணக்கிய மூளையுடன், பலே கில்லாடி சாகசங்களைச் செய்து வெற்றி வாகை சூடுவதாக, (ரீல் விடும் பாணியில்) அடுக்கடுக்கான கதைகளை இந்நூலாசிரியர் கூறியுள்ளார்.சீன தேசத்துக் கைவினைப் பொருட்கள் குறித்த தகவல்கள் போனஸ்.சிறுவர்களுக்கேற்ற பூங்கொத்து.