/ வாழ்க்கை வரலாறு / கர்மவீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும்
கர்மவீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும்
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144). பெருந்தலைவர் காமராஜ் என்றவுடன் எல்லாருக்கும் இலவசக் கல்வியும் இலவச மதிய உணவும் தான் முதலில் தோன்றும். எல்லாரும் படிக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு ஆதாரமாகத் தான் அவற்றை அவர் செய்தார்.காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களும் காமராஜரை ஏற்றுக் கொண்டனர் என்றால் அது அவரது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி என்பதை நூலாசிரியர் இந்த நூலில் தெரிவித்துள்ளார். காமராஜரைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய ஒரு கையேடாக இந்த நூல் அமைந்துள்ளது.