/ சுய முன்னேற்றம் / பேக்கரி அறிவியலும், தொழில்நுட்பமும்
பேக்கரி அறிவியலும், தொழில்நுட்பமும்
சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5) ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 326.)பேக்கரி தொழில்நுட்பம் பற்றி விளக்கும் நூல் இது. சாதாரணமாக, ரொட்டி தயாரிப்பது எப்படி? என்றில்லாமல், அதன் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளையும் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். அடிக்கடி சிற்றுண்டி, உணவு வகைகள் பற்றி அதிக நூல்கள் வெளிவந்திருக்கும் போது பேக்கரித் தொழில்நுட்பம் குறித்து தமிழில், நூல் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. அத்தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான ஆங்கில வாசகங்களும் தரப்பட்டிருக்கின்றன.