/ கதைகள் / செட்டி நாட்டு மண்வாசனைக் கதைகள்

₹ 75

உமையாள் பதிப்பகம், 37, எஸ்.என்.டி.லே அவுட், 4வது தெரு, டாடாபாத், கோயமுத்தூர்-641012. (பக்கம்: 160,) செட்டிநாட்டு நிகழ்ச்சிகள், நடைமுறைகள், பேச்சுவழக்கு, நிறைகுறைகளை உள்ளடக்கிய இதில் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் குடும்பப் பிரச்னைகளை மையம் கொண்டவை. "ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். வேலைக் காரனாக இருந்தால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். வயதாகி விட்டால், இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நிம்மதியாக இருக்கமுடியும்(18) "ஆயா சொன்ன குரங்கே/ அள்ளி அள்ளி முழங்கே/ உரைத்தால் மோரைக்குடி / உரைக்காவிட்டால் மிளகாயைக்கடி (34) இப்படி யதார்த்தமான கருத்துக்களைக் கொண்ட இக்கதைகளின் திரைப்பட, தொலைக்காட்சித் தொடர் போன்றவையும் ஏராளமாக உரையாடல்களில் இடம்பெற்றுள்ளன. பக். 156 இல், எடுத்தாளப்பட்டுள்ள பாடல்(எந்தக் குழந்தையும் என்றிருக்க வேண்டும்) கண்ணதாசன் பாடல் அல்ல புலமைப் பித்தன் எழுதியது. பெரும்பாலான நிகழ்வுகள் சிறுகதைகளாக உருமாற்றம் பெற்றுள்ள இந்நூல் ஓரளவு பொழுதுபோக்குக்கு பயன்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை