/ கதைகள் / சித்ரபவுரி
சித்ரபவுரி
வழக்கமான கதைப்போக்கில் இருந்து மாறுபட்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். துப்பறியும் ஆர்வத்தை புகுத்தி மாயாஜால வகை சாயலில் கற்பனைக் காட்சிகளால் நிறைந்துள்ளது. மயன் என்ற முதன்மை கதைப் பாத்திரத்தை சுற்றி சுவை குன்றாமல் சொல்லப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. நீரோட்டமான மொழிநடை தொடர்ந்து வாசிக்க ஆர்வமூட்டுகிறது. கொலையோடு துவங்கும் கதையை துப்பறிதல் நோக்கில் அடுத்தடுத்து காட்சிப்படுத்துவது சிறப்புடன் கையாளப்பட்டுள்ளது. நிலத்தடியில் நடக்கும் நிகழ்ச்சி விவரிப்புகள் மாறுபட்ட விந்தை உலகத்துக்கு இட்டு செல்கிறது. தற்காலத்தையும் பழங்காலத்தையும் பிணைக்கும் வகையில் காட்சிகளை கட்டமைத்து சொல்லியிருக்கும் நாவல் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




