/ வாழ்க்கை வரலாறு / சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் - கரிகாலன் சபதம் (பாகம் – 1)
சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் - கரிகாலன் சபதம் (பாகம் – 1)
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழ பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன் என பெயர் சூட்டல், வளவன் கருவூருக்கு இடமாற்றல் போன்ற செய்திகளை உள்ளடக்கியது.ஆக்கிரமிப்பு அரசன் அதிகனை எதிர்க்க படை உருவான விதம், காவிரி வரலாறு, கரிகாலன் காதல், திருமணம், காவிரி பூம்பட்டின வரலாறு, நீதி பரிபாலனம், வெண்ணிப் போர் வெற்றி போன்ற வரலாற்று சம்பவங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வறட்சியான வரலாற்று நுாலாக அமையாமல், சுவாரசியம் மிக்க நவீனம் போல் அமைய கற்பனை வளம் உதவி இருக்கிறது.– இளங்கோவன்