/ பொது / சினிமா
சினிமா
திரைப்படத் துறையில் பிரகாசிக்க திறன்களை வளர்க்க வழிகாட்டும் நுால். கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, இசை என ரசனை குன்றாது படம் தயாரிக்க நுணுக்கங்களை கற்று தருகிறது. படங்களை குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என்கிறது. கதையும், வசனமும் படத்தை துாக்கி நிறுத்துவதாக சொல்கிறது. எடிட்டிங் சொதப்பினால் நல்ல கதையும் குப்பையாகும் என்கிறது. எதார்த்தமான சண்டை, ரசனையான இசை, பாடலில் முத்திரை பதிக்க கையாள வேண்டிய வித்தையை எடுத்துரைக்கிறது. கதாசிரியர் தேர்வு முக்கியம் என்கிறது. தனித்திறமையால் சினிமாவில் சாதிக்கலாம் என நம்பிக்கையூட்டும் நுால். – டி.எஸ்.ராயன்




