/ கதைகள் / ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்
துாக்கு தண்டனை பெற்று மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட கைதியின் சுயசரிதை நுால். தமிழக சிறைகளின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. தண்டனை குறைப்பால் ஆயுள் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் என்பவரின் வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகியுள்ளன. வெட்டு, குத்து, கொலை சம்பவங்களின் கூடாரத்தில் இணைந்ததை விறுவிறுப்புடன் எடுத்து சொல்கிறது.தமிழக காவல் துறை செயல்பாடுகள், சிறை நடைமுறைகள், நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை கண்முன் நிறுத்துகிறது. சம்பவங்கள் காட்சி மயமாக வடித்து காட்டப்பட்டு உள்ளன. கைதிகள் உலகம் மட்டுமின்றி போலீஸ், சிறை அதிகாரி, வழக்கறிஞர் என பல்வேறு தரப்பு அனுபவங்கள் சித்திரமாக உள்ளன. குற்ற விசாரணை சமூகம் பற்றிய விழிப்புணர்வு நுால்.– ராம்




