/ கதைகள் / தெய்வீகத் திருமணங்கள்
தெய்வீகத் திருமணங்கள்
வாழ்வில் திருமண துணை மிகச் சிறப்பாக அமைய, கடவுளிடம் வைக்கும் கோரிக்கை பற்றிய நுால். சிவனும், பார்வதியும் சொக்கர் – மீனாட்சியாக இங்கே வந்தனர். சிவன் பாம்பைக் கழுத்திலே அணிந்து, புலித்தோலை உடுத்தியிருக்கிறான். அழகு மீனாட்சிக்கு கணவன். சீனிவாசன் கல்யாணம் மூலம், மனைவியை எந்தச் சூழலிலும் பிரியக்கூடாது என்று ஆண்களுக்கு உணர்த்தப்படுகிறது. ருக்மிணி தான், உலகிலேயே முதல் காதல் கடிதம் தீட்டியவள். மனம் கவர்ந்த கண்ணனுக்கு எழுதி, சபதம் செய்து, உறவுகளையும் மீறி திருமணம் செய்திருக்கிறாள். ஒவ்வொரு திருமணத்திலும் தத்துவங்களைப் பொதித்து புனையப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் நுால்.– தி.செல்லப்பா