/ பொது / தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும்
தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும்
ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இலக்கிய, இலக்கணங்கள் பயன்படுவது போன்று, அகராதிகளும் பயன்படுகின்றன. பழங்கால நிகண்டு நூல்களே பிற்காலத்தில் அகராதிகளாக வளர்ச்சி பெற்றன. ஒரு மொழியில் உள்ள சொற்களைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக அகராதிகள் விளங்குகின்றன என்று கூறலாம்.இந்நூல், நான்கு இயல்களாக அமைந்துள்ளது. அகராதித் தொகுப்பு நெறிமுறைகளை முதல் இயலும், தமிழ் ஒரு மொழி அகராதிகளின் அமைப்பையும் வரலாற்றையும் இரண்டாம் இயலும், தமிழ் இருமொழி அகராதிகளின் அமைப்பையும் வரலாற்றையும் மூன்றாம் இயலும், தமிழ் அகராதிகளின் ஒப்பீட்டாய்வை நான்காம் இயலும் விளக்குகின்றன.நூலாசிரியரின் கடின உழைப்பை நூல் முழுவதும் காணலாம். நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்.