/ ஜோதிடம் / தெய்வீக பஞ்சபூத தத்துவ எண் கணிதம்

₹ 165

பஞ்ச பட்சியை ஆராய்ந்து பலன்கள் கணிக்க உதவும் நுால். ஒருவர் பிறக்கும் நட்சத்திர அடிப்படையில் வளர்பிறை, தேய்பிறையை கணிக்க கூறுகிறது. அன்றைய நாளில் அவருக்கு உரிய நட்சத்திர பட்சியை கண்டுபிடிக்க வழிமுறை கூறப்பட்டுள்ளது. பஞ்ச பட்சி என்பது வல்லுாறு, ஆந்தை, காகம், கோழி, மயிலை குறிக்கிறது. இவற்றை நட்பு, பகை என பிரித்து காட்டுகிறது. இது தான் கணிப்பின் அடிப்படை விதியாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் வித்தியாசமான எண் கணிதமும் இதனுடன் தரப்பட்டுள்ளது. அதன்படி நட்சத்திரத்திற்கு எந்த எண் ராசி என கண்டறிந்து, பலன்களை கணித்து அறியலாம் என கூறுகிறது. ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்களுக்கு உதவும் புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ