/ வாழ்க்கை வரலாறு / எலான் மஸ்க் கனவு நாயகன்
எலான் மஸ்க் கனவு நாயகன்
சாகசங்களும், சர்ச்சைகளும் நிறைந்த உலகின் முக்கிய ஆளுமையின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் நுால். எலான் மஸ்கின் கனவுகள், தொழில் பாய்ச்சல்கள், சறுக்கல்களை சுவாரசியமாக பதிவு செய்துள்ளது.உலகில் எட்டு திசையும் இன்று ஒலிக்கும் பெயர் எலான் மஸ்கினுடையது. குறைந்த விலையில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்து, விண்வெளி ஆய்வுகளில் புரட்சியை ஏற்படுத்துபவர். விடாமுயற்சியுடன் அவரது உழைப்பு பெற்றுள்ள வெற்றியை மனதில் பதியும் வண்ணம் தருகிறது. வாழ்வில் வெற்றி பெறுவதற்கு முயற்சியுடன் என்னவெல்லாம் அவசியம் என்பதை இந்த வாழ்க்கை பாதை உணர்த்துகிறது. தொழில் உலகில் அதிரடி செயல்பாடுகளை விளக்குகிறது. முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகளை உடைக்க உதவும் வாழ்க்கை வரலாற்று நுால்.– மதி