/ வாழ்க்கை வரலாறு / எளிமை, இனிமை, நேர்மை தோழர் ஆர்.நல்லகண்ணு
எளிமை, இனிமை, நேர்மை தோழர் ஆர்.நல்லகண்ணு
சுதந்திரப் போராட்டத் தியாகி ஆர்.நல்லகண்ணு வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். சிறுவனாக இருந்தபோதே, விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமாக செயல்பட்டதை அறியத்தருகிறது.அப்பேதைய ஜமீன்தாரி முறை பற்றிய அவரது அபிப்பிராயம், துல்லியமான கணிப்பாக வியக்க வைக்கின்றது. பார்த்தீனியம் என்ற களைச்செடி விதை வந்த விதமும் அதனால் ஏற்பட்ட பாதிப்பும் சொல்லப்பட்டுள்ளது.தொழிலாளருக்காக நல்லகண்ணு போராடியதை பதிவு செய்துள்ளது. கீழ்வெண்மணியில் நடந்த கொடுமை பற்றிய விவரிப்பு, மனித உருவில் மிருகங்கள் உலாவியதைக் காட்டுகிறது. நேர்மையான வாழ்வுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் பற்றிய சுருக்கமான அறிமுக நுால்.– டாக்டர் கார்முகிலோன்