எளிமையான பார்வையில் இந்து மதம்
இந்து மதம் பற்றி புரியும் வண்ணம் எளிய நடையில் விவரிக்கும் நுால்.சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வாச்சாரியாரின் துவைதம் பற்றி எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இதில், 96 வகை தத்துவங்கள், ஆலயம், ஆன்மா லயிப்பதற்குரிய இடம் போன்ற விளக்கங்கள் உள்ளன. திருமூலர் குறிப்பிடும் ஆலயம் அமைக்கும் ஆகம விதிமுறைகள் எல்லாம் அழகுற பதிவு செய்யப்பட்டுள்ளன. முருகனின் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்கள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், எழு வகைப் பிறப்புகள், பூஜையில் கடைப்பிடிக்கும் 16 வகை உபசாரங்கள், ஐவகை மாயை, ஏழு வகை வித்தியா தத்துவங்கள் மிக எளிமையாக கூறப்பட்டுள்ளன. அகஸ்திய மகரிஷி, வேத வியாசர், பராசர மகரிஷி, ரிஷ்ய சிருங்கர், திருமூலர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், மெய்கண்ட தேவர், ராமலிங்க சுவாமிகள், நாராயண குருக்கள் போன்ற அருளாளர்கள் தந்த தத்துவம், தர்ம, கர்ம சாஸ்திர விதிமுறைகள், அவற்றை அடையும் வழிமுறைகள் முறையாக தொகுத்துத் தரப்பட்டுள்ளது. – புலவர் சு.மதியழகன்