/ கவிதைகள் / எளிய முறையில் யாப்பறிவோம்
எளிய முறையில் யாப்பறிவோம்
புதுக்கவிதையில் சொல்ல முடியாததை, மரபு பாக்களில் ஆணித்தரமாக சொல்ல முடியும் என உணர்த்தும் நுால். எதுகை, மோனை போன்ற மரபு பாக்களுக்குரிய அனைத்து வடிவத்திலும் புதிய உவமைகள், சொற்கள், பொருட்களை சேர்க்க முடியும் என்ற நோக்கில் அமைந்துள்ளது. யாப்பின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடையை, உள்ளங்கை நெல்லிக்கனியென புரியும் வகையில் விளக்குகிறது. அசை, சீர்களை பிரித்து காட்டி வாய்ப்பாடுகளை விளக்குகிறது. தளைகளை சுட்டி, எதுகை, மோனை, இயைபு போன்ற தொடை நயங்கள் இடம்பெற்றுள்ளன. அணியும், சந்த நயங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரியில் படிப்போர் யாப்பிலக்கணத்தை எளிதில் விளங்கி கொள்ள உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்