/ கதைகள் / என் அன்பான ஸ்வேதாவுக்கு!

₹ 70

வாழ்க்கை அனுபவம் வழியாக பாடங்களை கற்று தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தமுள்ள, 24 கதைகளிலும் சமூக அக்கறை வெளிப்படுகிறது. கொடுமையை கண்காணித்து போராடி தயாரித்த ஆவணப்படத்தை தடை செய்தால், அதை படைத்தவன் மனம் என்ன பாடுபடும் என்பதை அருமையாக சித்தரிக்கிறது ஒரு கதை. திருமணத்திற்கு முன் உறவு குறித்து, ‘ராம் லட்சுமணன்’ கதை உண்மை நிலையை பேசுகிறது. நடக்கும் போது கால் கொடுத்த இறைவனுக்கும், சைக்கிளில் போகும் போது நடந்து செல்பவனுக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்ல படிப்பினை ஊட்டுகிறது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு குடும்பத்தையே நாசமாக்குவதை சொல்லும் கதை அற்புதம். வித்தியாசமான படைப்புகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை