/ பயண கட்டுரை / என் பயணங்களின் வழியே...!
என் பயணங்களின் வழியே...!
வெற்றி பெற்றவருக்கு பேரும், புகழும், போதிய பணமும் இருக்கிறது என ஒற்றை வரியில் சொல்லிவிடுவோம். அதில் இழந்தது என நிறைய இருக்கும். புகழ் உச்சியில் உள்ள சிலர் வாழ்க்கைப் பக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படியாக ஏறி வருவதற்கு நடத்திய போராட்டம், பட்ட துயரம், வலியை கதை போல் சொல்லியுள்ளார்.சிறுவயதில் மிட்டாய் வாங்கியபோது தவறுதலாய் விரல் பட்டதற்காக திட்டு வாங்கிய சிறுவன், இன்று யாராக இருக்கக்கூடும்... மருத்துவமனையில் சிசுவை காப்பாற்ற ஓடிய பயிற்சி மருத்துவர், இன்று என்னவாக இருக்கிறார்... சூர்ப்பனகையை தேர்வு செய்து, நடனமாடிய நாட்டிய நங்கை யார்... போன்ற செய்திகளை அறிய உதவும் நுால்.– லலிதா