/ கட்டுரைகள் / எனக்குள் ஒரு கனவு!

₹ 175

பக்கம்: 470 சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டு விட்டதால், அவனைத்தூய்மைப்படுத்த, அவன் பாட்டி, அவனைப் பசுவின் சாணத்தைத் தின்னச் சொன்னதை அவன் மறக்கவில்லை.அவன் வளர்ந்து பெரியவனாகிய போது, மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா? என, மிக நொந்து, அதற்காக நவீன கழிப்பறைகள் வடிவமைத்து "சுலப் என்ற ஓர் இயக்கத்தைத் துவங்கி நடத்தி வருகிறார் பிந்தேஷ்வர் பதக். இவர் முயற்சி கழிப்பறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, ஒரு மையம் அவற்றைக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டிருந்தவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தான இடத்தை ஏற்படுத்தித் தந்தது.இவரைப் போலவே, குப்பை பொறுக்கும் சிறுவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காகவே நிறுவனம் துவங்கிய அனிதா அஹிப்ஜா. இப்படி இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20 பேர்களின் வித்யாசமான வெற்றிக் கனவுகளைப் படிக்கும்போது, நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியாது. காரணம், இவர்கள் எல்லாருமே தாங்கள் கற்ற, நிர்வாக இயலின் கொள்கையைத் தங்கள் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தாமல், மனித குலத்திற்குச் சேவை செய்து வெற்றிகரமாக வரும் "சமூகத் தொழிலதிபர்கள்! "ராஷ்மி பன்னல் ஆங்கிலத்தில் எழுதிய "எ லவ் எ டிரீம் என்ற நூலின் தமிழாக்கம் தான் இந்த நூல். ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை