/ அரசியல் / எனது அரசியல் பயணம்
எனது அரசியல் பயணம்
தமிழ் மண்ணில் கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள் மறைந்து கிடக்கின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும் எடுத்துரைக்கிறது இந்த நுால். முதல் பகுதியில் நுாலாசிரியரை உருவாக்கிய தலைவர்களையும், மூத்த ஆளுமைகளையும் பற்றி கூறப்பட்டுள்ளது.அடுத்த பகுதியில் போராட்ட அனுபவங்கள், இயக்க வளர்ச்சி, பேரிடர் காலங்களில் இயக்கத்தின் சேவை என அரசியல் பயண அனுபவங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும், தியாகங்களையும், அடுத்த தலைமுறை அறிந்து கொள்வதை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்