/ பயண கட்டுரை / என்சான்டிங் வேர்ல்ட் ஆப் பாரஸ்ட்ஸ் (ஆங்கிலம்)

₹ 160

வன உலகத்தின் வசீகரத்தைக் காட்டும் வகையில் விவரிக்கும் நுால். வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வது போல் எளிய ஆங்கில நடையில் அனுபவத்தை தருகிறது. வன அதிகாரியாக பணியாற்றிய போது கண்ட மலைப்பகுதி அழகையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கமுறக் காட்டுகிறது. மலைப் பகுதியில் சந்தன மரங்கள் பாதுகாப்பு பணி, மரங்கள் பற்றி விவரிப்பு, பள்ளத்தாக்கில் சென்ற அனுபவம், கடமையில் பொறுப்புணர்ச்சி, மலைப்பாதை வழியில் கண்ட உயிரினங்களின் காட்சி என பல்வேறு தகவல்களை உடையது.பழங்குடி சிறுவர்களை பாலியல் கொடுமையிலிருந்து காப்பாற்றிய பாதிரியார் பற்றிய செய்தி, இறந்த யானையின் தந்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. அனுபவக் கீற்றாக மலர்ந்துள்ள நுால்.– ராம.குருநாதன்


முக்கிய வீடியோ