/ சுய முன்னேற்றம் / ஏணிப்படிகள்

₹ 160

ஏணிப்படியாக இருந்து வாழ்வில் உயர்வதற்கு வழிகாட்டுவோர் பற்றி விவரிக்கும் நுால். வாழ்வதற்கு பொருள் வேண்டும்; வாழ்வதிலும் பொருள், அதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என வள்ளல் சீதக்காதியை குறிப்பிடுகிறது. இறைவன் தந்தது எல்லாருக்கும் உரியது என, மக்கா நகரம் உருவாக்கம் குறித்து தெளிவுபடுத்துகிறது. கர்ப்ப நிலையில் பெண் அழகிய காட்சிகளை காண வேண்டும் என்பது போதனை மட்டும் அல்ல; அடுத்த சமுதாயம் எப்படி மலர வேண்டும் என்ற ஆக்கபூர்வ கருத்தாக உள்ளது. அன்னை தெரசாவின், ‘சேவை செய்து பாருங்கள்; கடவுளே அருகில் வருவார்’ என்ற வாக்கு உட்பட பெரியோரின் பொன்மொழி கருத்துகளை எடுத்தாண்டு இருக்கும் விதம் அருமையாக உள்ளது. எல்லா மதத்தவருக்கும் கருத்தை உணர்த்தும் புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி