/ கல்வி / எண்களின் எண்ணங்கள்

₹ 200

பக்கம் : 184 கணிதம் கற்பது கசப்பல்ல, மகிழ்ச்சி என்பதை விளக்கும் அழகிய நூல். ஆங்கிலத்தில் அல்லாமல், தமிழில் வண்ணப்படங்களுடன் எழுதிய விதம் பாராட்டுதற்குரியது.எண்களின் மீது, நம்நாட்டு மக்களுக்கு அரிய பற்று உண்டு. அதனால் தான், இந்தியர் கணிதத்திறமையை, அமெரிக்க அதிபர் ஒபாமா வியக்கிறார். எறும்புகள் இலக்கை நோக்கி பயணிப்பதில் உள்ள கணித தத்துவம், பூக்கள் காயாக மாறும் தன்மையில் அடங்கிய கணிதம், ஒன்றையொன்று அடித்து சாப்பிடும் பூச்சிகள் வாழும் கால அளவை கணக்கிட்டு, அதில் உருவாகும் அரிய செய்தி என்று பல தகவல்கள் உள்ள நூல். வரைபடங்கள், விளக்கங்கள் வண்ணத்தில் உள்ளன.பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் முதல் எல்லா மாணவ, மாணவியரும் புரட்டிப் பார்த்து, புரிந்து கொண்டு கணிதத்தில் ஆர்வம் பெற நல்லநூல். தமிழில் வெளிவந்திருப்பதால், இதன் விலை அதிகம் இல்லை.


சமீபத்திய செய்தி