/ வாழ்க்கை வரலாறு / என்னை நான் பார்க்கிறேன்
என்னை நான் பார்க்கிறேன்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சுயசரிதை நுால். தமிழக வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்றது பாங்குடன் விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை பின்புலமாக கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்து, கடும் முயற்சியால் படித்து முன்னேறியதை எளிய நடையில் முன்வைக்கிறது. தமிழக அரசில் துணை கலெக்டராகி, ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றதை உரைக்கிறது. கலெக்டர் பணியின் போது, சிக்கல்களுக்கு தீர்வு கண்ட விபரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட தடைகளை விலக்கி, செயல்பட்டதை எடுத்துக்கூறுகிறது. தமிழக நிர்வாக வரலாற்றில் பங்கேற்றதை கூறும் சுயசரிதை நுால். – மதி




