/ கட்டுரைகள் / எண்ணங்கள் எழுத்துக்கள்
எண்ணங்கள் எழுத்துக்கள்
நுாலகத் துறையின் நுட்பங்கள் பற்றி விவரிக்கும் நுால். பதிப்பாளர்களின் ஏக்கம், வாசகர்களின் எதிர்பார்ப்பு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நிர்வாகத்தில் நுாலகத் துறை பேணப்பட்ட முறை பற்றி கூறப்பட்டு உள்ளது. மொழி தெரிந்தால் போதும், திணித்தல் வேண்டாம் என்கிறது. பணியாளர் தேர்வு, போட்டித்தேர்வு, நீட் தேர்வில் வேண்டிய மாற்றங்களை கூறுகிறது. விருது பட்டபாடு, சுற்றுப்புற துாய்மை, சுத்தத்திற்கான செலவு கூடினால் சுகாதாரத்துக்கான செலவு குறையும், நிலம் கையகப்படுத்தலில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு பற்றி அலசுகிறது. பணிகளுக்கு ஆலோசனை தரும் நுால். – புலவர் சு.மதியழகன்




