/ கட்டுரைகள் / எண்ணங்கள்... வண்ணங்கள்...

₹ 250

எழுத்தாளருக்கு ஓய்வே கிடையாது என நிரூபிக்கும் வகையில் அமைந்த நீல பத்மநாபனின் படைப்புலகம் பற்றிய நுால். சக எழுத்தாளர்கள் பற்றிய பார்வை, படைப்புகள் மீதான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதழ்களில் வெளியான பேட்டிக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. விமர்சனத்துடன் வெளிப்பட்டுள்ள எண்ணங்களும், தெளிவை தரும் வண்ணக் கலவையாக நேர்காணல்களும் பின்னிணைப்புடன் மூன்று பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி எழுத்தாளர் நகுலனுடனான அனுபவங்கள் துவங்கி, பிற எழுத்தாளர்களின் படைப்புகள் மீது நீல பத்மநாபனின் கருத்துகளை உள்ளடக்கியது. புதிய புத்தகங்கள் மீது அவர் கொண்டிருக்கும் காதலையும், வாசிப்பில் தணியாத மோகத்தையும் வெளிப் படுத்துகிறது. அடுத்த பகுதியில் தீராநதி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வெளியான நீல பத்மநாபனின் பேட்டி கட்டுரைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேட்டியும் தெளிவான சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளது. சுதந்திரமாக எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள விதம் சுவாரசியம் தருகிறது. எழுத்தாளனுக்கு ஓய்வேஇல்லை என்ற மையக்கருத்தை வலியுறுத்துகிறது. இதில் ஒவ்வொரு ஆக்கமும் புதுமையுடன் திகழ்கின்றன. இறுதி பகுதி, எழுத்தாளர் நீல பத்மநாபன் மற்றும் அவரது படைப்புலகம் பற்றிய கருத்து பரிமாற்றமாக உள்ளது. பிரபல நடிகர் கமல்ஹாசன், பேராசிரியர் சண்முகசுந்தரம், பிரபல எழுத்தாளர் இரா.முருகன் உள்ளிட்டோரின் கருத்துகளுடன் மலர்ந்துள்ளது. நீல பத்மநாபன் கவிதைகள் மீதான மதிப்பீடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நினைவில் இனிக்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. ஓய்வற்ற நிலையில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரின் வாழ்வையும், படைப்பையும் அலசலுடன் போற்றும் நுால். – மலர்


சமீபத்திய செய்தி