/ வாழ்க்கை வரலாறு / எப்போதும் எம்.ஜி.ஆர்
எப்போதும் எம்.ஜி.ஆர்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பற்றி இப்புத்தகம் விவரிக்கிறது. நடிகராக இருந்து முதல்வராக ஆட்சி செய்து மறையும் வரை, தனி உதவியாளராக இருந்த மகாலிங்கத்திடம் பெற்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. உண்மைக்கும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட செய்தி கிடைத்ததும், எம்.ஜி.ஆர்., கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா?பொங்கல் பண்டிகையை மட்டும் எம்.ஜி.ஆர்., உற்சாகமாக கொண்டாடுவார் ஏன்?ஒரே ஒரு தபால் கார்டு தான், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சார விளக்கேற்றியது; கதை தெரியுமா?ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய சுவாரஸ்யமான புத்தகம் இது!–- சி.எஸ்.சூர்யபிரியன்