/ கவிதைகள் / எரிதழல் பாரதி

₹ 280

பாரதியின் பன்முக பரிமாணத்தை வெளிப்படுத்தும் நுால். காதலையும், தத்துவத்தையும், பக்தியையும், காப்பியத்தையும் பாடிய கவிதை ஆற்றலை அலசுகிறது. உரைநடையையும், கதை தன்மையையும் விளக்குகிறது. பணியாற்றிய பத்திரிகைகள் பற்றி அறியத்தருகிறது. புதிய ஆத்திசூடி படைப்பில் மதம் சார்ந்த இறைப்பெயரை எல்லாம் சொல்லி இவற்றை கடந்து நிற்கும் பரம்பொருளை குறிப்பிட்டிருப்பது குறித்து தெளிவுபடுத்துகிறது. வசன கவிதைகளில் வெளிப்படும் வீச்சை அறியத்தருகிறது. பாரதி வாழ்க்கை நிகழ்வுகளை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. கவிதை வேகத்திற்கு இணையாக உரைநடையிலும் கருத்து வெளிப்படுவதை உணர்த்துகிறது. உணர்ச்சி பொங்கும் பாடல்களை அடி மாறாமல் தந்துள்ளது, பாரதி படைப்பாற்றலை அனுபவிக்க உதவும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை