/ மாணவருக்காக / எட்ட இயலும் இலக்குகள்
எட்ட இயலும் இலக்குகள்
திசையெல்லாம் தன்னுடையதே என்று நெற்றி நிமிர்த்தி சுழன்று வரும் கல்லுாரிப்பருவம் கடந்து, வேலைக்காகத் திசைகளைத் தேடும் உளைச்சல் பருவம் உருவாகிறது. இளமைப்பருவத்தை இலக்கு வைக்காமல் நகர்த்துபவர்களுக்கு வாழ்க்கை பிற்காலத்தில் பெரும் சோதனைக் களமாகிவிடுகிறது. இன்றைய சூழலில், சரியான திசையைக் காட்டும் வழி இல்லையே என ஏங்குவோர் குறையைப் போக்க, பல வழிகாட்டு நுால்களும் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் வந்திருக்கும் இந்நுாலில் மத்திய, மாநில அரசுப் பணிகள் மற்றும் பல பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய விபரங்களை எளிய முறையில் தொகுத்துத் தந்திருக்கிறார் நுாலாசிரியர்.இளைஞர்களுக்கும், வழிநடத்தும் பெற்றோர் களுக்கும் பயனுள்ள கைப்புத்தகம். –மெய்ஞானி பிரபாகரபாபு